அண்ணா வாழ்க்கை வரலாறு
இந்திய இலக்கியச் சிற்பிகள் அறிஞர் அண்ணா சு. சண்முக சுந்தரம் 1 வாழ்க்கை வரலாறு ‘ குள்ளமான உருவம்; குறும்புப்பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லாத தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி மட்டை; கையில் - வெற்றிலை பாக்கு பொட்டலம்; இந்தத் தோற்றத்தோடு அதோ காட்சியளித்து நிற்கிறாரே அவர்தான் அண்ணா”, என்று அண்ணாவை வருணனை செய்வார் நாவலர் நெடுஞ்செழியன். அண்ணாவின் பிறப்பும் வளர்ப்பும் காஞ்சிபுரம் பல துறைகளிலும் வரலாற்றுப் புகழ் படைத்த பெருநகர். நாளந்தாவுக்கு இணையான ஒரு பல்கலைக்கழகம் இங்கே இருந்தது. பல்லவர்களின் சிற்பக் கலையின் கதையை இன்றும் கல்லும் சொல்லும். பட்டினத்தடிகளால் பாடப்பட்டதும் பரிமேலழ...